அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு அமெரிக்கர்கள் உளளிடட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

623

அல்பேர்ட்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் அமெரிக்க விருந்தாளிகளான இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு அமெரிக்கர்க்ள உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jasper தேசியப் பூஙகா பகுதியின் Honeymoon Lake அருகே, நெடுஞ்சாலை 93இல் செவ்வாய்கிழமை மாலை 6.30 அளவில் இநத விபத்து சம்பவித்து்ளளது.

எதிரெதிரே வந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாகவும், வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்று தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிறிதொரு வாகனத்தின் மீது மோதியதாகவும, இதன்போது இரண்டு வாகனங்களுமே தீப்பற்றிக் கொண்டதாகவும் கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான சிற்றூர்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்நத ஐந்து பேர் பயணித்ததாகவும், அந்த ஐந்து பேருமே அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனவும், அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மேலும் இருவர் உயிராபத்தான நிலையில் எட்மண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனத்தில் பயணித்த ஐந்தாவது நபரான இரண்டு வயது சிறுவர் ஒருவர் உலங்குவானூர்தி மூலம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருடைய காயங்கள் பாரதூரமானவை அல்ல என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை தெற்கு நோக்க பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தில் நான்கு பேர் இருந்ததாகவும், விபத்தின் போது நான்கு பேருமே உயிரிழந்து விட்டதாகவும், எனினும் அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னமும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தின் போது வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளான மூன்றாவது வாகனத்தில் இருந்தோரிலும் இரண்டு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *