முக்கிய செய்திகள்

அழகு நிலையத்தில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா

233

யோர்க் பிராந்தியத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் உச்ச அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 23ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள், Vaughan இல் Weston வீதியில் அமைந்துள்ள, Nails at Anthony என்ற குறித்த அழகு நிலையத்துக்குச் சென்றவர்கள், இரண்டு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறித்த அழகு நிலையத்தில் பணியாற்றும் 8 பேரில் ஏழு பேருக்கு அதிகளவில் பரவும் ஆபத்துள்ள உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், அவர்களில் நால்வர் யோர்க் பிராந்தியத்தையும், மூவர் ரொறன்ரோவையும் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அழகு நிலையம் மார்ச் 26ஆம் நாள் பிற்பகல் 1 மணியில் இருந்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *