அழிக்கப்படும் சாட்சியங்கள் என்ற ஆவண கையேடு நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், உயிர்நீத்த 74 உறவுகள் தொடர்பான பதிவுகள் இந்த கையேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.