அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸில் புதிதாக 8 பேருக்கும் அண்டை மாநிலமான விக்டோரியாவில் 3 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டிசம்பர் நடுப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொத்தணி ஆரம்பித்த நிலையில் கால் மில்லியன் மக்கள் ஜனவரி 9 வரை கடுமையான முடக்க கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தனர்.
இருப்பினும் நகரின் மேற்கில் வேறுபட்ட கொரோனா தொற்று உறுதியான 13 பேர் இதுவரை அடையாளம் கண்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளக விளையாட்டு அரங்கு, முடி வெட்டும் கடைகள் போன்ற உட்புற இடங்களில் முக்கவசங்களை அணிவதை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.