அவுஸ்ரேலியாவில் மீண்டும் பரவி வரும் காட்டுத் தீ

22

அவுஸ்ரேலியாவில் மீண்டும் பரவி வரும் காட்டுத் தீயினால், சுமார் 7 ஆயிரம் ஹெக்ரெயர் பரப்பளவு காடுகள் தீயில் எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.

கட்டுப்படுத்த முடியாதளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால், கொரோனா முடக்க நிலையில் உள்ள இந்தப் பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பலமான காற்றுக் காரணமாக நேற்று இரவு காட்டுத் தீ இரண்டு மடங்காக பரவியுள்ளது என்றும், அதன் முகப்பு 75 கிலோ மீற்றருக்கு விரிவடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற போதும், இதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுவரை காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அவுஸ்ரேலிய நகரங்களில் வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *