அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மற்றுமொரு நபருக்கு குருதி உறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டாவைச் சேர்ந்த 60வயது நபர் ஒருவருக்கே இவ்வாறு குரு உறைந்துள்ளமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அல்பேர்ட்டாவின் தலைமை வைத்தியர் தீனா ஹின்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடாவில் இவ்வாறு குரு உறைதலுடன் கண்டறியப்பட்ட இரண்டாவது நபர் இவராவர்.
அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.