ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை குறைந்த வயதுடையவர்களுக்கு பயன்படுத்துவது பற்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இதுவரை இருவருக்கு குருதி உறைதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சுகாதாரத் தரப்பினர் முழுமையான மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னரே குறைந்த வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.