அ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்றுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ரரமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதாலும், 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாலும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைவாக பெற்றுள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.