அ.தி.மு.க. வின் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது

31

அ.தி.மு.க. வின் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை அதிமுக வெளியிட்டுள்ள 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலின்படி,  ஏற்கனவே, உறுப்பினர்களாக இருந்த பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான ஆனந்தன், தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன், பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா, ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, வளர்மதி, சின்னய்யா, சோமசுந்தரம், முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், செல்வராஜூ ஆகியோருக்கு போட்டியிட  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நிலோபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களுக்கும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்பட சில உறுப்பினர்களுக்கும் இம்முறை போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *