முக்கிய செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை

183

தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமான, முல்லைத்தீவு – குருந்தூர் மலையில், சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும்  காவல்துறை பாதுகாப்புடன், தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை, ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமைகள், கிராமிய, கலை, கலாசார, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இன்று காலை இதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தநிகழ்வில், தொல்பொருள் திணைக்களத்தின் செயலாளர் அருண மனதுங்க, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் ரத்நாயக்க, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சிறிலங்கா படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே, குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படுவதை அறிந்து,  நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன்,  கஜேந்திரன், வினோநோகரதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் விஜயகுமார், மற்றும் ஊடகவியலாளர்ள் உள்ளிட்டவர்கள் அங்கு செல்ல முற்பட்டபோது, சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும், குருந்தூர் மலைக்கு செல்வதற்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர்களும், குருந்தூர் மலைக்கு செல்வதற்கு சிறிலங்கா கவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *