முக்கிய செய்திகள்

ஆசிய எதிர்ப்பு இனவெறியைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

227

ஆசிய எதிர்ப்பு இனவெறியைக் கண்டிக்கும் தீர்மானம் ரொறன்ரோ மாநகர சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடந்த கூட்டத்தில், நகரசபை உறுப்பினர் Cynthia Lai இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தார்.

தனது வட்டாரத்தில் அண்மையில் உணவு வாங்கச் சென்ற ஆசியர் ஒருவர், இனவெறியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய எதிர்ப்பு இனவெறியை எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்வது என்பது குறித்து ஊழியர்களும் பணிக்குழுவும் மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *