ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரிப்பு

47

ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் கடந்த ஆண்டில், அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

கனடாவில் பாரட்பட்சமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதோடு அனைவரும் சமமானவர்கள் என்ற மனப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மேரி என்.ஜி.யின் (MARY N.G) கீச்சகப் பதிவையும் பிரதமர் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில் “இப்போது, ஆசிய கனடியர்களுக்கு அவசரமாக உங்கள் உதவி தேவை. கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளன. ஆனால், இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தடுப்பூசி எங்களிடம் இல்லை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேரி என்.ஜி. (MARY N.G) பதிவிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *