ஆசிய கனடிய சமூகத்தினர் பேரணி

27

வடக்கு அமெரிக்காவில், அதிகரித்து வரும், ஆசிய எதிர்ப்பு வெறுப்புணர்வு குற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரியும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஆசிய கனடிய சமூகத்தினர் பேரணி நடத்தவுள்ளனர்.

அனைத்து வகையிலான இனவெறிக்கும் எதிரான இந்த பேரணி ஞாயிறு பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை, Penticton’s Gyro Park இல் நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணித்திருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் இருந்து ஆசிய எதிர்ப்பு வெறுப்புணர்வு குற்றங்கள், வன்கூவரில் 717 வீதத்தினால்  அதிகரித்துள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *