ஆசிய வெறுப்புணர்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள்

31

ஆசிய வெறுப்புணர்வையும், ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறும் வலியுறுத்தி, நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வன்கூவர், கல்கரி, ரொறன்ரோ, விக்ரோரியா, மொன்ட்ரியல், மற்றும் கனடாவில் ஏனைய நகரங்களில், இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான ஆசிய இனத்தவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிய இனத்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து கனடாவை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *