கியூபெக்கில் வரும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக இரண்டு பிரதான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பேச்சுவார்த்தைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 73 ஆயிரம் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ள சில விடங்கள், தமது சங்கத்தின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருக்கும் என்றும், எனினும் இந்த முன்மொழிவு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு மற்றும் பணிச் சுமையைக் குறைத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய இந்த முன்மொழிவு பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும், தமது சங்கத்தின் உறுப்பினர்களே இதுகுறித்து இறுதியான முடிவை எடுப்பார்கள் எனவும், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.