முக்கிய செய்திகள்

ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் “பெய்ட்டி” புயல் இன்று கரையை கடந்துள்ளது

398

ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் “பெய்ட்டி” புயல் இன்று கரையை கடந்துள்ளது.

புயல் கரையை கடந்தபோது 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன், கனமழை பெய்த நிலையில், புயல் கரையைக் கடந்த பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த புயலின் நகர்வின் பின்னரும் வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் இனமிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆந்திரா கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் தொடரூந்துச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை பார்வையிட உள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *