ஆப்கானில் தாலிபான்கள் ஆயுதபலத்தை மேம்படுத்தலாம்;அந்தனி பிளின்கென்

36

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர், தலிபான்கள் தமது ஆயுத பலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு (Ashraf Ghani) அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தனி பிளின்கென் (Anthony Blinken) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய அடுத்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள எஞ்சிய துருப்பினரும் அங்கிருந்து வெளியேறவேண்டும்.

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தானில் பலம் வாய்ந்த நிலையில் இருந்த தாலிபான்களை அங்கிருந்த அகற்றும் நோக்கில் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தனர்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட படைக்குறைப்பு ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி ஆவலுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நேட்டோ படையினரை திருப்பி அனுப்பும் கால அட்டவணையை பிற்போட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *