முக்கிய செய்திகள்

ஆப்கானில் 12 சகபாடிகளை சுட்டுக்கொன்ற இரு இராணுவ வீரர்கள்

106

ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் ஒன்றில், 2 இராணுவ வீரர்கள், 12 சக வீரர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் 14 இராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர் என்றும், நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 இராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது என சுதாகரிப்பதற்குள் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த 2 இராணுவ வீரர்களும், அங்கிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலை,  தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே சுட்டுக் கொன்றதாக தலீபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அதேவேளை, தலைநகர் காபூலில்    வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2  அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *