முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரை கைப்பற்றுவதற்கான 4 நாள் சண்டையில் 300இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

331

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியைக் கைப்பற்றுவதற்கான அரசபடைகளுடன் 4 நாட்களாக நடைபெறும் கடும் சண்டையில் 300இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இந்த 300 எண்ணிக்கையில் பொதுமக்கள், ஆப்கான் பாதுகாப்பு படையினர், தலீபான்கள் ஆகியோர் அடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று கஜினியைக் குறிவைத்து தாலிபான்கள் போர் தொடுத்ததற்குப் பின்னரான இந்த உயிரிழப்புக்கள் தொடர்பில் ஆப்கான் அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில்,20 இல் இருந்து 30 வரையான எண்ணிக்கையில் பொதுமக்களும், ஏறக்குறை 100 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

அத்துடன் 12 முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 194 தலீபான் படைகயினரும் கொல்லபப்பட்டுள்ளனர் என்றும கூறப்பட்டுள்ளது.

அரசபடைகள் நிலைகுலைய நகரின் பல்வேறு பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதுடன், காபூலிலிருந்து ஊடுருவி நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்றே ஆப்கான் அரச வட்டாரங்கள் குறித்த இந்த தாக்குதலை விபரித்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இராணுவ ஆலோசகர்கள் ஆப்கானுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 1000 பேர் கொண்ட படை கஜினிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

2,70,000 மக்கள் தொகை கொண்ட கஜினி நகரின் வீழ்ச்சி தாலிபான்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக பார்க்கப்படுவதுடன், காபூலையும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை இப்போது தாலிபான்கள் வசம் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *