முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்

499

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் மற்றும் படையினருக்கிடையில் அடிக்கடி துப்பாக்கி சூடு இடம்பெற்று வருவதனால், இதில் சிக்கி பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நிலையில், இதன்போது 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *