முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 30 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

45

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் உள்ள நிஜ்ராப் (nijrab) மாவட்டத்தில் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் 2 படைப்பிரிவுகள் கூட்டாக இணைந்து, இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதன்போது, தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில், 30 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 16 பேர் அல் – குவேடா (Al-Qaeda) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *