முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பிற்பகல் நடந்த வெடி குண்டு தாக்குதலில்

476

ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பிற்பகல் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில்  அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி எந்த பாதிப்புமின்றி தப்பினார் என அவரது பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஹேம்ட் அஜீஸ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுள்ளாது

இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபுலில் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோ தலைமையகம் அமைந்துள்ள காபுலின் பசுமை மண்டலத்திற்கு அருகில் சென்றது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous Postமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 கோடி வழங்கினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *