முக்கிய செய்திகள்

ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனையில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

257

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள “நூறு ஏக்கர் தவனைக்கண்டம்” என்று அழைக்கப்படும் வயல்வெளிப் பிரதேசத்தில், இன்று காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனையில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது எல்.எம்.ஜீ-01. ரி56 வகைத் துப்பாக்கி 01 என்பன மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர், நேற்று மாலை தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது, மர்மப்பொருள் தென்பட்டதையடுத்து வாழைச்சேனையில் உள்ள காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இடத்துக்கு இன்று காலை சென்று பார்வையிட்ட காவல்துறையினர், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி, அவற்றை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *