ஆர்டிக் பகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு கனடா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்கேய் (துழாn ஆஉமுயல) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏனெனில் ஆர்டிக் பகுதியில் ரஸ்யாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடி;க்கை எடுக்கப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா தனது எல்லைகளை பாதுகாத்துக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்டிக்கின் பல்வேறு பகுதிகளில் ரஸ்ய படையினர் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆர்டிக் பகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு கனடா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென..
Apr 07, 2019, 00:26 am
784
Previous Postஅமரர் வல்லிபுரம் கந்தசாமி
Next Postவடக்கு கிழக்கு மாகாணங்களைக் காண்பித்து மஹிந்த அரசாங்கம் முடிந்தளவு தெற்கை அபிவிருத்தி செய்துள்ளதாக