ஆறில் ஒரு கனேடியர் நிதிப் பிரசினைகளால் அவதியுற்று வருவதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன

631

ஒட்டுமொத்த கனேடியர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் ஏற்கனவே பலத்த நிதிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

வறுமை தொடர்பிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு, இன்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகளில் கலந்துகொண்டோரில் 21 சதவீதம் பேர், தங்களால் பற்சிகிச்சைகளுக்கு கூட செல்லமுடியாதுள்ளதாக கூறியுள்ள நிலையில், தம்து உணவுத் தேவைகளுக்கான பணத்தைக்கூட வேறு நபர்களிடம் இருந்து அண்மையில் கடனாக பெற்றுக் கொண்டுள்ளதாக 25 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

தாம் பொருளாதாரத்தில் மிகவும் கடினமான காலத்தினை எதிர்நோக்கிவருவதாக 35 வயதிற்கும் 54 வயதிற்கும் இடைப்பட்ட 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், தாம் பொருளாதாரத்தின் விழிம்பில் நிற்பதாக 39 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *