முக்கிய செய்திகள்

ஆல்பேர்ட்டாவின் மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு

142

ஆல்பேர்ட்டாவின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆல்பேர்ட்டா பிரந்திய முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பாட் ரெஹ்ன் (Pat Rehn) மெக்ஸிகோவிற்கும், நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட் (Tracy Alert) ஹவாய்க்கும் சென்றுள்ளமை ஏற்கனவே உறுதிப்படத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களான  தன்யா ஃபிர் (Tanya Fir) மற்றும் ஜெர்மி நிக்சன் (Jeremy Nixon) ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆல்பேர்ட்டா முதல்வர் குறிப்பிட்டள்ளார்.

பொதுசுகாதார விதிகளையும், சட்டங்களும் மதிக்கப்படாமை நியாயமான செயற்பாடாக கருதவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *