முக்கிய செய்திகள்

ஆல்பேர்ட்டாவில் கொரோனா தளர்வுகள்

39

எதிர்வரும் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி முதல் ஆல்பேர்ட்டாவில் கொரோனா தளர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கு முன்னதாக மருத்துவத்துறையின் தெளிவான வரையறைகளையும் கள ஆய்வு அறிக்கைகளையும் மீளவும் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாகாண அளவில் வணிக நிலையங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை தொடர்பில் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆல்பேர்ட்டாவுக்கு முன்னோக்கிய பயணத்திற்கான பாதை தெரிவதாகவும் ஆனால் கவனமான நகர்வு அவசியம் என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *