தெற்கு லெபனானில், அத்துமீறி நுழைந்த இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக, ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த வானூர்தியை தாம் கைப்பற்றியுள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
அதேவேளை, தமது ஆளில்லா வானூர்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, லெபனான் எல்லைக்குள் வீழ்ந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
எனினும், ஐ.நாவின் நீலக் கோட்டுக்குள்ளேயே வானூர்தி விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த வானூர்தியில் இருந்த தகவல்கள் ஏதும் கசியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
லெபனானில் இருந்து சென்ற ஆளில்லா வானூர்தி ஒன்று இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தப்பட்டு 10 நாட்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.