ஆளும் லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் படைத்துறை வீரர்கள் விவகார அமைச்சராக பதவி வகித்து ஜோடி வில்சன் றேபோல்ட்டை பதவி விலகும் அறிவிப்பை இன்று வெளியிட்டார்

371

ஆளும் லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சராகவும், பின்னர் முன்னாள் படைத்துறை வீரர்கள் விவகார அமைச்சராகவும் பதவி வகித்து வந்த ஜோடி வில்சன் றேபோல்ட் (Jody Wilson-Raybould) பதவி விலகும் அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்ட SNC-Lavalin(லவலன்) கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான வழக்குக் குறித்துப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அலுவலகம் றேபோல்ட் மீது அழுத்தம் பிரயோகித்ததென்று கடந்த வாரம் ஃகுளோப் அன்ட் மெயிலில் வெளியான கட்டுரை ஒன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முழுமையான விசாரணை ஒன்றை Mario Dion கோரியிருந் நிலையில் சமஷ்டி நெறிமுறை ஆணையாளர் ஆயசழை னுழைn நேற்று அறிவித்தார்.

ஆணையாளர் விசாரணை அறிவிப்புக் குறித்து பிரதமர் ரூடோ வரவேற்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை றேபோல்ட் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அமைச்சரவைப் பதவி, தற்காலிகமான பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜித் சஜனின் (Harjit Sajjan) கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *