முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

1417

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3–வது டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. புஜாரா (51 ரன்), கேப்டன் விராட்கோலி (62 ரன்), அஸ்வின் (72 ரன்), ரவீந்திர ஜடேஜா (90 ரன்), ஜெயந்த் யாதவ் (55 ரன்) ஆகியோர் அரை சதத்தை கடந்தனர். கடைசி கட்ட வீரர்களின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் மீண்டு கம்பீரமான நிலையை எட்டியது. இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், அடில் ரஷித் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

134 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து இருந்தது. குக் 12 ரன்னிலும், மொயீன் அலி 5 ரன்னிலும், பேர்ஸ்டோ 15 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜோரூட் 36 ரன்னுடனும், காரெத் பேட்டி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ஜோரூட் 78 ரன்
நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோரூட், காரெத் பேட்டி ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசினார்கள். அதனை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். காரெத் பேட்டி ரன் கணக்கை தொடங்காமலேயே ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ்பட்லர் 18 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.

அடுத்து ஹசீப் ஹமீத், ஜோரூட்டுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்கள் பங்குக்கு தாக்குப்பிடித்து ஆடினார்கள். 25–வது அரை சதம் கண்ட ஜோரூட் 179 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட கிறிஸ் வோக்ஸ் (30 ரன்), அடில் ரஷித் (0) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் முகமது ஷமி வீழ்த்தினார். முகமது ஷமி வீசிய பவுன்சர் பந்தை சந்திக்க முடியாமல் திணறிய கிறிஸ் வோக்ஸ் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் சில நிமிடத்தில் களத்தில் நின்று ஓய்வு எடுத்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் பவுன்சராக வீசிய அடுத்த பந்தை தடுத்து ஆட முயன்ற அவர் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதேபோல் அடில் ரஷித்தும் பவுன்சர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் (5 ரன்) ரன்–அவுட் ஆனார்.

103 ரன் இலக்கு
தேனீர் இடைவேளைக்கு முன்பு இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 90.2 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. 2–வது அரை சதம் அடித்த ஹசீப் ஹமீத் 156 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எம்.விஜய், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். விஜய் ரன் எதுவும் எடுக்காமலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணி வெற்றி
ஆனால் பார்த்தீவ் பட்டேல் அதிரடியாக அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றார். காரெத் பேட்டி பந்து வீச்சில் பார்த்தீவ் பட்டேல் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 2–வது இன்னிங்சில் 20.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5–வது அரை சதம் கண்ட பார்த்தீவ் பட்டேல் 54 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்னும், கேப்டன் விராட்கோலி 11 பந்துகளில் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

அடுத்த ஆட்டம்
இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 8–ந் தேதி தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 283 ரன்

இந்தியா 417 ரன்

2–வது இன்னிங்ஸ்

இங்கிலாந்து

குக் (பி) அஸ்வின் 12

ஜோரூட் (சி) ரஹானே (பி) ஜடேஜா 78

மொயீன் அலி (சி) ஜெயந்த் யாதவ் (பி) அஸ்வின் 5

பேர்ஸ்டோ (சி) பார்த்தீவ் பட்டேல் (பி) ஜெயந்த் யாதவ் 15

பென் ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ. (பி) அஸ்வின் 5

காரெத் பேட்டி எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 0

ஜோஸ்பட்லர் (சி) ஜடேஜா (பி) ஜெயந்த் யாதவ் 18

ஹசீப் ஹமீத் (நாட்–அவுட்) 59

கிறிஸ்வோக்ஸ் (சி) பட்டேல் (பி) முகமது ஷமி 30

அடில் ரஷித் (சி) உமேஷ்யாதவ் (பி) முகமது ஷமி 0

ஜேம்ஸ் ஆண்டர்சன் (ரன்–அவுட்) 5

எக்ஸ்டிரா 9

மொத்தம் (90.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 236

விக்கெட் வீழ்ச்சி: 1–27, 2–39, 3–70, 4–78, 5–78, 6–107, 7–152, 8–195, 9–195.

பந்து வீச்சு விவரம்:

முகமது ஷமி 14–3–37–2

உமேஷ்யாதவ் 8–3–26–0

அஸ்வின் 26.2–4–81–3

ரவீந்திர ஜடேஜா 30–12–62–2

ஜெயந்த் யாதவ் 12–2–21–2

இந்தியா

விஜய் (சி) ஜோரூட் (பி) கிறிஸ்வோக்ஸ் 0

பார்த்தீவ் பட்டேல் (நாட்–அவுட்) 67

புஜாரா (சி) ஜோரூட் (பி) அடில் ரஷித் 25

விராட்கோலி (நாட்–அவுட்) 6

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 104

விக்கெட் வீழ்ச்சி: 1–7, 2–88.

பந்து வீச்சு விவரம்:

ஜேம்ஸ் ஆண்டர்சன் 3–2–8–0

கிறிஸ்வோக்ஸ் 2–0–16–1

அடில் ரஷித் 5–0–28–1

பென் ஸ்டோக்ஸ் 4–0–16–0

மொயீன் அலி 3–0–13–0

காரெத் பேட்டி 3.2–0–18–0




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *