முக்கிய செய்திகள்

இடி மின்னல் தாக்கத்தினால் ரொரன்ரோவில் GO தொடரூந்து சேவைகள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன

602

இடி மின்னல் தாக்கத்தினால் இலத்திரனியல் சமிக்கை கடடமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை அடுத்து, ரொரன்ரோவில் GO தொடரூந்து சேவைகள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

இதனால் யூனியன் தொடரூந்து நிலையத்தில் இருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் தொடரூந்து சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளுடன் சென்ற மூன்று தொடரூந்துகள், யூனியன் நிலையத்திற்கு மேற்கே சேவைத் தடையினை எதிர்கொண்டு, இடை நடுவே சிக்குண்டு நின்றுள்ளதனால், அந்த பாதை ஊடான ஏனைய அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட தொடரூந்துகள் அனைத்தும் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும் வரையில், புதியதாக அந்த பாதை வழியே வேறு எந்த சேவைகளையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுளளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக Mimico, Exhibition, Danforth, Kennedy மற்றும் Scarborough Town Centre ஆகிய பகுதிகளை நோக்கி பயணிக்கும் மக்களை, பேரூந்துகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *