முக்கிய செய்திகள்

இதுவரை 1.7 வீதமானவர்களுக்கே முழு அளவில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

41

கனடாவில் நாடு முழுவதும், இதுவரை 1.7 வீதமானவர்களுக்கே முழு அளவில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணி நிலவரங்களின்படி, கனடாவில் புதிதாக, 1 இலட்சத்து 41 ஆயிரத்து 64 பேருக்கு புதிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 38 இலட்சத்து 62 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் இரண்டு முறையும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 26 ஆயிரத்து 473 பேர் மட்டும் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *