இதே நாளில் முன்னெப்போதும் காணாத குளிர் நேற்று இரவு ரொரன்ரோவை வாட்டியுள்ளது

619

நவம்பர் 22ஆம் நாளில் வரலாறு காணாத குளிர் நேற்று இரவு ரொரன்ரோவை வாட்டியுள்ளது.

இதற்கு முன்னர் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் நாள் அன்றே அதிகளவு குளிராக சுழியத்திற்கு கீழே 12.4 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையி்ல், நேற்று இரவு சுழியத்திற்கு கீழே 13 பாகை வரை வெப்பநிலை வீழ்ச்சியடைந்ததுடன், காற்றுடன் சேர்த்து அது சுழியத்திற்கு கீழே 20 பாகை வரையில் உணரப்பட்டுள்ளது.

பனிக்காலம் இன்னமும் முழுமையாக ஆரம்பிக்க முன்னர், நேற்று ரொரன்ரோவுக்கான முதலாவது அதி தீவிர குளிர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீவிர குளிர் நகரை வாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று பகல் வேளையும் குளிர் தொடரும் எனவும், வெப்பநிலை சுழியத்திற்கு கீழே 6 பாகை வரையில் குறையும் என்ற போதிலும், மதியமளவில் காற்றுடன் சேர்த்து சுழியத்திற்கு கீழே 10 பாகை வரையில் உணரப்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

எனினும் குளிருடன் கூடிய இந்த நிலை நீடிக்காது எனவும், நாளை வெப்பநிலை 3 பாசை செல்சியசாக உயர்வடையும் என்றும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *