இத்தாலியில் இருந்து பயணிகள் எந்தவிதமான சோதனைகளுமின்றி இங்கிலாந்துக்கும் நுழைகின்றனர்

37

கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் இருந்து பயணிகள் எந்தவிதமான சோதனைகளுமின்றி இங்கிலாந்துக்கும் நுழைகின்றனர் என்று சன் நியூஸ் (thesun.co.uk) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

கொரோனா வைரஸ் அச்சத்தினால் இத்தாலியின் லோம்பர்டி (Lombardy) வேனெட்ரோ (Veneto) உள்ளிட்ட 14 பிராந்தியங்களில் 16 மில்லியன் மக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியப் பிரஜைகள் எந்தவிதத் தடையும் இல்லாமல் இத்தாலியை விட்டு வெளியேறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு இத்தாலியின் வெனிஸ் மற்றும் மிலன் உள்ளிட்ட11 நகரங்களுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது.

சீனாவிற்கு வெளியே மிக மோசமான பாதிப்பைக் கொண்ட இத்தாலியில் மேலும் 133 நோயாளிகள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 7,375 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்து உலக நாடுகளில் அதிகம் பாதிப்புக்குளான நாடுகளில் இரண்டாவது இடத்தில் அது உள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *