இந்தியப் பிரதமரின் தொகுதி செயலகத்தை இணையத் தளத்தில் விற்க முயற்சி

22

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், தொகுதியான வாரணாசியில் உள்ள அவரது தொகுதி செயலகத்தை இணையத் தளத்தில் விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் செயலக படத்துடன்,  7 கோடி 50 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்படவுள்ளதாக,  இணைய விற்பனைத் தளத்தில், விளம்பரம் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரதமர் செயலகத்தை, படம் எடுத்த நபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

எனினும், விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான முகவரியில் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *