முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம்

20

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவர், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ தொடருந்து முதல்கட்ட விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

சென்னை ஆவடி ராணுவ தளபாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் பீரங்கியை இந்திய இராணுவத்திடம் கையளிக்கும் நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், இடம்பெறும் நிகழ்ச்சி முடிந்தவுடன், அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதன் பின்னர் பிரதமர் மோடி கேரளாவுக்குப் பயணமாகவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *