முக்கிய செய்திகள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இரண்டாவது நாளாகவும் மாநிலங்களவை இன்றும் முடங்கியது

492

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டில் 40 இலட்சம் மக்கள் விடுபட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு இறுதிப் பட்டியல் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலுக்காக 3.29 கோடி மக்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்த போதிலும், பட்டியலில் 2.89 கோடி பேரின் பெயர்களே இடம் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 40 இலச்சம் பேரின் பெயர் பட்டியல் குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படாது விடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்படுவதற்கு வழியேற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவும் நிலையில், அந்த 40 இலட்சம் மக்கள் பதிவேட்டில் இருந்து விடுபட்டமைக்கு எதிர்கட்சிகள் தங்களின் கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய நாள் மாநிலங்கள் அவையில் எதிர்கட்சிகள் இது தொடர்பில் கேள்வி எழப்பியதால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தின் விளைவாக நேற்றைய நாள் மாநிலங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவ்வாறே மாநிலங்களவை இன்று தொடங்கிய போதும் இது தொடர்பில் கேள்வி எழப்பப்பட்டதை அடுத்து மாநிலங்களவை இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைக்கபபட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *