இந்தியாவின் ஆகாஷ் – என்ஜி எவுகணை சோதனையில் வெற்றி

48

ஆகாஷ் – என்ஜி எனப்படும் புதிய தலைமுறை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு தளபாட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ்  -என்ஜி ஏவுகணையை  தயாரித்துள்ள  பாதுகாப்பு தளபாட ஆராய்ச்சி மையம்  இன்று முதன்முறையாக ஒடிசா தளத்தில்  இருந்து அதனைப் பரிசோதனை செய்துள்ளது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

இந்திய விமானப்படைக்கு வான் எல்லையில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *