இந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2020ஆம் ஆண்டில் இதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை, பெல்நிறுவனம், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இணைந்து ரோபோக்களை வடிவமைப்புச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி ஒருவருடத்திற்குள் நிறைவடையும் என பெல் நிறுவனத்தின் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் குறித்த ரோபோக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இந்திய எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.