இந்தியாவின் கேரளா மாநிலத்தை அடுத்து நாகலாந்து மாநிலமும் கனமழையின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக நாகலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு என்பன ஏற்பட்டுள்ளன.
இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கான நிவாரண நிதியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குமாறு நாகலாந்து முதலமைச்சரை நெய்பு ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ரியோவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.