கொரோனா தொற்றுப் பரவலுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவத் தயாராக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுடனும், புதுடெல்லியில் உள்ள கனேடிய தூதுவருடனும் தொடர்பில் இருப்பதாக கனடாவின் கொள்வனவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
உதவுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்துக்கு பயன் அளிக்க கூடிய தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் மற்றும், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுடனும் உதவத் தயாராக இருக்கிறோம் என்றும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.