முக்கிய செய்திகள்

இந்தியாவும், சீனாவும் போரின் விளிம்பில் இல்லை

35

இந்தியாவும், சீனாவும், போரின் விளிம்பில் உள்ளதாக அமெரிக்கா கருதவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின் (lloyd Austin ) தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின் (lloyd Austin ), இந்திய பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கூட்டறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின் (lloyd Austin ), ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா இதுவரை வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நல்லுறவை எப்போதும் அமெரிக்கா மதிக்கிறது என்றும், உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் மனித உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் அமெரிக்காவுக்கு மிகமுக்கியம் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின் போது ஏனைய நாடுகள் மீதான பொருளாதார தடை குறித்து பேசவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *