இந்தியா, ‘டிஜிட்டல்’ சேவை வரி விடயத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின், டிஜிட்டல் சேவை வரி குறித்த, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் விசாரணை முடிவுகள் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டன.
குறித்த அறிக்கையில், ‘இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் டிஜிட்டல் சேவை வரிகளுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, அதன் டிஜிட்டல் சேவை வரி, இந்திய நிறுவனங்கள் அல்லாதவற்றை குறிவைக்கிறது. அதேசமயம், இந்திய நிறுவனங்களுக்கு வெளிப்படையாகவே விலக்கு அளிக்கிறது.
இந்திய நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டும் அதே சமயம், அமெரிக்க நிறுவனங்கள், அதே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே சேவைக்கு, வரி விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.