இந்தியாவில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (DRDO) கொரோனா தொற்றுக்கு எதிரான 2-டிஜி (2-Deoxy-D-Glucose (2-DG) என்ற மருந்தை தயாரித்துள்ளது.
சாதாரண மருந்து போல் வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுவதுடன், பிராணவாயுவை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைப்பதாக பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.