முக்கிய செய்திகள்

இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்வதற்கு மத்திய வரவு- செலவுத்திட்டம் வழிவகுக்கும்

98

இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்வதற்கு மத்திய வரவு- செலவுத்திட்டம் வழிவகுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு- செலவுத்திட்டக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைகின்றது. வழக்கமாக மாலை தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போது வரவு- செலவுத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் வழங்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, வரவு- செலவுத்திட்டத்தில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு குறையவில்லை. சுகாதார ஆராய்ச்சிக்கு 2 ஆயிரம் ரூபா கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று போன்ற சவாலான சமயம் கூட அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஓடவில்லை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியமானது” என குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *