முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை

661

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி (Shah Mahmood Qureshi) ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ கெட்டர்ரஸ் (António Guterres)-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலான் கூறுகையில், ஆயுதம் ஏந்திய காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையிடம் சரண் அடைய வேண்டும் என்று அவர்களது பெற்றோர் வலியுறுத்த வேண்டும் என கூறினார். மேலும் அதனை மீறி யாராவது ஆயுதம் ஏந்தினால் அவர்களையும் வீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனை சுட்டு கொன்றோம் என ஜெனரல் கேஜேஎஸ் திலான் கூறினார். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் ராணுத்தின் குழந்தை அவற்றை பாகிஸ்தான் ராணுவம் தான் கட்டுப்படுத்தி வருகிறது என தெரிவித்தார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை எனவும் அவர் கூறினார். பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடக்கும் இடங்களில் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது படைகளை பயன்படுத்தும் என அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனால் இங்கு மோசமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா சபைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை அவசர நிலையாக எடுத்து கொண்டு உடனடியாக உதவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *