இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் அனைத்து வகை வானூர்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.30இலிருந்து அமுலாகும் இந்த தடையானது, அடுத்த முப்பது தினங்களுக்கு அமுலில் இருக்கவுள்ளது.
சமஷ்டி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை, உள்விவகாரங்கள், போக்குவரத்து, குடிவரவு, குடியகல்வு, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய அமைச்சர்கள் ஒன்று கூடி ஆராய்ந்த பின்னர் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த வானூர்திகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.