இந்தியா, ரஷியா, சீனா இடையே 12 ஆண்டுகளுக்கு பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இந்திய தலைமை அமைச்சர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இந்தியா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளனர்.
ரஷ்யா,இந்தியா,சீனா ஆகிய நாடுகள் இணைந்த RIC என்றழைக்கப்படும் இந்த முத்தரப்பு கூட்டமைப்பின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும் அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.