இந்தியா வாய்ப்பினை தவறவிட்டுள்ளது; டெக்கான் குரோனிக்கல்

35

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினையில், தார்மீக ரீதியான நிலைப்பாட்டை எடுக்காமல், பிராந்தியத்தின் மனசாட்சியைக் காக்கும் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளது என்று இந்திய ஊடகமான டெக்கான் குரோனிக்கல் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தமை தொடர்பாக,  டெக்கான் குரோனிக்கல் ஆசிரியர் தலையத்தில்,

“சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுவதில், இந்தியா ஒரு நடைமுறை சமநிலையைக் கண்டறிய முயற்சித்திருக்கலாம்.

சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்தமைக்கான காரணமாக  இருந்திருக்கலாம்.

ஆனாலும் போரை வெல்லும் போர்வையில் சிறிலங்கா இராணுவம் செய்தது தார்மீக ரீதியில் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவை இது பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான பார்வையாளராக இருப்பது, தார்மீக வங்குரோத்து நிலையையே பிரதிபலிக்கிறது.” என்றும்  அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *