முக்கிய செய்திகள்

இந்திய – சீன 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை, இடைநிறுத்தம்

108

இந்திய – சீன எல்லைப் பகுதியில் படைகளை விலகிக் கொள்வது தொடர்பாக நடக்கவிருந்த 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை,  இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய – சீன எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு நாட்டு படைத் தளபதிகள் மட்டத்தில் நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட 8வது சுற்று பேச்சுவார்த்தையை அடுத்து, கணிசமான படைகள் எல்லைப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்தும், இதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும், 9வது சுற்று பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எட்டப்படும் என கூறப்பட்டது.

இந்தநிலையில்  கிழக்கு லடாக் மோதல்களுக்கு காரணமாக இருந்த, ஜெனரல் சாவோ சோங்கி ,  சீன இராணுவத்தின் வடக்கு பிரிவு படைத் தளபதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, ஜெனரல் ஜாங் சுடோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தளபதி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து, முன்னேற்றங்களை பார்வையிடுவதற்கு, காலஅவகாசம் தேவை என்பதால்,  9வது சுற்று பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *